28 நிமிடத்தில் 59 செய்திகள்... காலை தந்தி செய்திகள்
தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அண்ணாமலை குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஊடகங்களில் பேசியே அண்ணாமலை பெரிய ஆளாகி விட்டதாக கூறினார். மேலும், முதிர்ந்த அரசியல்வாதி குறித்து கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசமி தெரிவித்தார்.
திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி அழைத்து சென்று, அதிகாலை 4 மணிக்கு சரமாரியாக வெட்டியுள்ளதாக அனுசுயாவின் தாய் மற்றும் சகோதரர் தெரிவித்துள்ளனர். தன் மகள் எப்படியாவது பிழைத்து வர வேண்டும் என்றும் அவரது தாய் கண்ணீர் மல்க வேண்டுகிறார்.
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. பெங்களூரு வீரர் விராட் கோலி அரைசதம் அடித்தார். அடுத்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சும்மா பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருப்பதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சிபிஐ-யில் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி, எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம் என்று கூறினார்.