31 நிமிடத்தில் 58 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (16.07.2023)

x

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை புதுநத்தம் பகுதியில் 206 கோடி ரூபாய் செலவில் 6 தளங்களுடன் 2 லட்சத்து 13 சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத் திறப்பு விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, நூலக கட்டடத்தைத் திறந்து வைத்து, சுற்றிப் பார்த்தார்.


மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று கூறினார். கருணாநிதிக்குள் இருந்த போராளி தான், இன்று பலரும் படிக்க காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். தரமான கல்வி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதே தம் நோக்கம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்..


மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் பக்கம் நிற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது முந்தைய கர்நாடக பாஜக அரசு தான் என்று கூறிய கே.எஸ்.அழகிரி, அண்ணாமலை மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டினார்...


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்டதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஊடக வெளிச்சத்தில் தன்னை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலையை பார்த்து விளையாட்டுத்தனமான அரசியல் செய்வதாக நகைகின்றனர் என்றும் கூறினார்..


Next Story

மேலும் செய்திகள்