26 நிமிடத்தில் 56 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (21.07.2023)

x

மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, மேலும் 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த மே மாதம் 4 ம் தேதி இளம் பெண் இருவரை, ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதோடு பாலியல் அத்துமீறலுக்கும் உட்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது


பாஜகவாக முறித்துக் கொள்ளும் வரை, அவர்களுடனான கூட்டணி தொடரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.


மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மனதை பாதிக்கும் வகையில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் மோடி வாய் திறந்து உள்ளார் என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பிரதமரை பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் இரு பெண்களை ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வழக்கில், மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என பைரன் சிங் உறுதியளித்தார்.





Next Story

மேலும் செய்திகள்