25 நிமிடத்தில் 56 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (26.07.2023)

x

சென்னையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், பீன்ஸ் விலை 80 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இதே போல் மிளகாய் 70 ரூபாய், இஞ்சி 250 ரூபாய், பூண்டு 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட திமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 15 மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மொத்தம் 12 ஆயிரத்து 645 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தென்காசி திமுக தெற்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளரை நியமதித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, புதிய பொறுப்பாளராக ஜெயபாலன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில், மேடையில் வைத்து பெண் ஊராட்சி தலைவருடன் நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விளையாட்டு துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது என்றும், விளையாட்டு வீரர்களோடு அமைச்சர் உதயநிதி எப்போதும் இருக்கிறார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற, முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு துறையால் அமைச்சர் உதயநிதியும், அமைச்சர் உதயநிதியால் விளையாட்டு துறையும் பெருமை அடைவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் தொன்மையான விளையாட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்