56 லட்சம் வேஷ்டி, 49 லட்சம் சேலைகள்... பொங்கலுக்குக்காக தயாரிப்பு பணி மும்முரம்

x

56 லட்சம் வேஷ்டி, 49 லட்சம் சேலைகள்... பொங்கலுக்குக்காக தயாரிப்பு பணி மும்முரம்

ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 420 விசைத்தறிகள் மூலம் 49 லட்சத்து 46 ஆயிரத்து 683 சேலைகளும், 8 ஆயிரத்து 567 தறிகள் மூலம் 56 லட்சத்து 78 ஆயிரத்து 804 வேஷ்டிகளும் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்காக முதல் தவணையாக ரூ.243.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வேட்டி, சேலைகள் உற்பத்தியானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும், மொத்த வேஷ்டி, சேலைகளில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க கைத்தறி ஆணையர் உத்தரவிட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்