29 நிமிடத்தில் 55 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (30.05.2023)
ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதை, மூதாட்டி ஒருவர் டிவி-யில் கண்டுகளித்து உற்சாக அடைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது...
ஐபிஎல் தொடரில் வெற்றி வாகை சூடியுள்ள சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், ரன்னர்-அப் ஆன குஜராத்துக்கு பன்னிரன்டரை கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டு உள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15-ம் தேதி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். முதலில் ஜூன் 5-ஆம் தேதி வருவதாக இருந்த நிலையில், வெளிநாட்டு பயணம் காரணமாக தேதி மாற்றப்பட்டு தற்போது ஜூன் 15ல் கிண்டி மருத்துவமனையை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். கடந்த 23-ந்தேதி அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பின்னர் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பானில் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை இரவு சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.