24 நிமிடத்தில் 54 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (08.07.2023)

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விளிம்புநிலை மக்களும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குடும்ப அட்டை, ஆதார் இல்லை என்றாலும் அவற்றை பெற்று பயனடைவதற்கு உதவ வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை புகாரின்றி செயல்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர்க்கான ஆயிரம் ரூபாய் உரிமைதொகை திட்டம், திமுகவினருக்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட திட்டமா என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவினரின் கண்காணிப்புடன் கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் உதவித்தொகை பெறுபவர்கள் திமுகவுடன் தொடர்புடையவர்களாக இருப்பர் எனவும் கூறியுள்ளார்.

வேலூரில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தக்காளி விலை அதிகமாக இருப்பதாக கூறி, கொஞ்சம் தக்காளி தருமாறு கேட்டுள்ளனர். ஓடும் லாரியில் இருந்தவர் ஒவ்வொரு தக்காளியாக தூக்கியெறிய, டூவீலரில் சென்றவர்கள் தக்காளியை கேட்ச் பிடித்து பத்திரப்படுத்தினர்.

தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்யாமல் ரேஷன் கடைகளில் தற்காலிகமாக விற்பனை செய்தால் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிடங்குகள் அமைத்து காய்கறிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்