22 நிமிடத்தில் 51 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (28.04.2023)

x

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். சந்திப்பின் போது குடியரசு தலைவரிடம் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டும் என்று விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு போரால் சூடானில் சிக்கி தவித்த இந்தியர்களில் மேலும் 246 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையொட்டி சூடானில் சிக்கி தவித்த மேலும் 246 பேர் ராணுவ விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்றனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்காவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியிலேயே நிறுத்தப்பட்டதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, டுவிட்டரில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

தன்பாலின ஜோடிகளுக்கு சட்டப்படியான அங்கீகாரம் அளிக்காமல், அவர்களுக்கான சமூக நல பலன்களை அளிப்பது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்கரவிட்டுள்ளது. தன்பால் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரிய மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்