26 நிமிடத்தில் 50 செய்திகள்... காலை தந்தி செய்திகள்
தாம் வகிக்கும் பதவியில் எப்போது மகிழ்ச்சி இல்லையோ அப்போது தமது பணியை முடித்து கொள்வேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, மரைக்காயர் பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், தான் வகிக்கும் பதவியில் எப்போது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையோ அப்போது அந்த பணியை முடித்து கொள்வேன் என்றார்.
இரண்டாம் நாள் சுற்றுப் பயணத்தில் இன்று இமானுவல் சேகரன் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்துகிறார். முன்னதாக உத்திரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை முடிவை அறிவிக்கிறார்.வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், இன்று மாலை முடிவெடுக்க உள்ளனர். கர்நாடகா பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வரும் 20-ஆம் தேதி முடிவடைவதால், அதற்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கிறது.