18 நிமிடத்தில் 50 செய்திகள்.. | மாலை தந்தி எக்ஸ்பிரஸ்

x

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையை சேர்ந்த பாலசுந்தரம் - சாந்தி தம்பதியின் மகள் சாருலதா 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ள சாருலதாவை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியில் படித்த மாணவி செந்தமிழ் செல்வி 10 வகுப்புபொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றுள்ளார். கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான பள்ளி மறுசீரமைப்பு பணிகள் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 ஆயிரத்து 732 பேர் எழுதிய நிலையில், 17 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதேபோல் அரசு பள்ளிகளில் 7ஆயிரத்து 598 பேர் எழுதிய நிலையில்7 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சி பெற்று, 96.38 சதவீதம் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது‌. இதனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கல்வி அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்

சேலத்தில் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதால், அதிமுக கட்சி கொடிக்கம்பம், பேனர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது அங்கு சென்ற அதிமுக நிர்வாகிகள், அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு, பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக ம‌ம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்