சிதறிய மண்டை, கிழிந்த காது, நொறுங்கிய கை... பீப்பி ஊதியதால் வந்த வினை - அலறிய ஓடிய நெல்லை மக்கள்
திசையன்விளை மணலிவிளையை சேர்ந்த வேலன் என்பவரது வீட்டின் முன்பு, வானமாமலை என்பவர் பீப்பி ஊதியதால் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் வேலன் ஆதரவாளர்களுக்கும், வானமாமலை ஆதரவாளர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திசையன்விளையை சேர்ந்த கோஷ்டியினர், கையில் கம்பிகளுடன் மகாதேவன்குளம் சென்று, கசுரன் என்பவர் வீட்டு முன்பு தகராறில் ஈடுபட்டனர். அப்போது, இரு கோஷ்டியினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், திசையன்விளை கோஷ்டியை சேர்ந்த நவீன், அவரது சகோதரர் மணிகண்டன், சந்துரு ஆகியோரும், கசுரன், அவரது சகோதரர் தர்ஷன் ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீமுத்துக்குமரன், பிரவீன், விக்னேஷ், கசுரன் ஆகியோரை கைது செய்தனர்.