19 நிமிடத்தில் 48 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (24.06.2023)

x

இந்தியாவின் வளர்ச்சி, ஒட்டு மொத்த உலகத்தின் வளர்ச்சி எனவும், தொழில் தொடங்குவதற்கான சூழலை இந்திய அரசு வழங்குவதாகவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய அவர், 21-ஆம் நூற்றாண்டின் விதியை மாற்றியமைக்க இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு வல்லமை இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவோடு கைகோர்க்கும் நாடுகள் நிச்சயம் பொருளாதார ரீதியாக பலனடையும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடி மற்றும் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து சுந்தர் பிச்சை பேசுகையில், இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக, இந்தியாவில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா நோக்கம் மற்ற நாடுகளுக்கு, ஒரு வரைபடம் போன்றது எனவும் புகழாரம் சூட்டினார்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் மிகத் தெளிவாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகாரில் மாநிலம் பாட்னாவில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள், அடுத்த 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டுமே வரலாற்றில் பதிவாக வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

2024 மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது தான் கடைசி தேர்தலாக இருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக எத்தனை கருப்புசட்டங்கள் கொண்டு வந்தாலும் அதனை முறியடிப்போம் என்றும் எங்களை வறுத்திக்கொண்டு நாட்டு மக்களை காக்க பாடுபடுவோம் என நம்பிக்கை அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்