ஒரே நேரத்தில் குவிந்த 45,000 போலீஸ் - பற்றி எரியும் பிரான்ஸ் - என்ன நடக்கிறது?
பிரான்ஸ் நாட்டில் கடந்த செவ்வாய் அன்று, 17வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனையடுத்து அந்தநாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. வீடுகள், கார்கள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்படுகிறது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் முழுவதும், 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
Next Story