19 நிமிடத்தில் 45 செய்திகள்.. | மாலை தந்தி எக்ஸ்பிரஸ்

x

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒம்ரான் நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் நிறுவிட முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 128 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம், உலகின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஆளுநர் கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பது அவரவர் விருப்பம் என தெரிவித்தார்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 31ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும் எனவும், அக்டோபர் இறுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து தேர்தல் ஆணையர் குழு தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியதாகி உள்ளது‌. வரும் தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்