22 நிமிடத்தில் 44 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (23.06.2023)

x

மனித குலத்திற்கு எதிரியான பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை வெல்ல வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவும், அமெரிக்காவும் அவரவர் மரபிலேயே ஜனநாயகப் பண்பை பெற்றுள்ளதால், ஜாதி, மதம், இனப் பாகுபாடு அடிப்படையிலான கேள்விகளுக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரதமர் மோடி உடன் கைகுலுக்கி வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின் போது இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

முதலமைச்சர் ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறாரோ, அவர்தான் பிரதமராக வருவார் என, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை அழித்து விடுவதாக பலர் பேசி உள்ளனர் என்றும் அவர்களுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டியவர் கருணாநிதி எனவும் நினைவுகூர்ந்தார்.

சென்னையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12.20 மணி வரை, 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், எண்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளதாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்