திடீர் ரெய்டில் சிக்கிய 431 கிலோ தங்கம் - மும்பை வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி

x

மும்பை சேர்ந்த பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு பண மோசடி வழக்கை பதிவு செய்த அமலாக்கப்பிரிவு தொடர்ந்து விசாரிக்கிறது. விசாரணையில் நிறுவனம் வங்கியில் 2 ஆயிரத்து 296 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும், பணம் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணையை தொடர்ந்த அமலாக்கப்பிரிவு ரக்ஷா புல்லியன் அண்ட் கிளாசிக் மார்பல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. அப்போது அங்கு 761 ரகசிய லாக்கர்கள் இருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேரமராக்கள் பொருத்தாத இடத்தில், முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாது லாக்கர்கள் இருந்தது தெரியவந்தது. அதில் சோதனையிட்டபோது 340 கிலோ வெள்ளி, 91 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்