தீவிரவாதிகள் என நினைத்து சீக்கியர்களை சுட்டுக்கொன்ற விவகாரம் - 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

x

1991 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் என நினைத்து சீக்கியர்கள் 10 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், 43 காவலர்களுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை உத்தர பிரதேச மாநிலம் பீலிபீதில் போலீசார் கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 47 போலீசாருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதில் மூன்று போலீசார் இடைப்பட்ட காலத்தில் இறந்து விட்டனர்.

இந்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம், 43 உத்தர பிரதேச காவலர்களுக்கு 7-ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

கொடுங்குற்றத்தை செய்பவர் என்பதனாலேயே ஒருவரை கொள்வது போலீசாரின் கடமையாகது.

குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்