"குடிக்காம இருங்க...பசங்கள பாத்துக்கோங்க"-25 வயது இளைஞருடன் ஜூட் விட்ட 40
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வசிக்கும் பெண்ணிற்கு, கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சுமார் 20 வயதில் 2 மகன்கள் உள்ளனர். படிப்பு, வேலை என 2 மகன்களும் வெளியே சென்று வரும் சூழலில், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண், பேஸ்புக் மூலம் பல்வேறு நபர்களுடன் நேரத்தை செலவிட தொடங்கியுள்ளார்.
இதில் குறிப்பாக, கடலூரைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் அந்த 40 வயது பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்தப் பெண்ணை பார்க்க கடலூரில் இருந்து ஒரத்தநாடு பகுதிக்கு வந்துள்ளார் இளைஞர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததை அடுத்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தாய் வீட்டிற்கு வராததை அறிந்த மகன்கள் இருவரும், தனது தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாய் காணவில்லை என காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண், நடந்த சம்பவங்களை ஆடியோ பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.