துடியாய் துடிக்க வைத்த வலி... பேன் கடித்ததில் 40 பேருக்கு உடல்நல பாதிப்பு - இப்படி கூட நடக்குமா?

x

பொன்னமலை வனப்பகுதியில் உள்ள மிளகு தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்களை குரங்கு மற்றும் காட்டுப்பன்றியின் உடலில் இருந்த பேன் கடித்துள்ளது. அந்த வகை பேன் கடித்ததில் 40 பேருக்கு உடலில் அரிப்பும், காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், பேன் கடித்த பகுதியில் ஒரு வாரத்திற்கு சிவந்து அரிப்பும், காய்ச்சலும் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தொழிலாளர்களுக்கு நோய் தாக்குதலை அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பாம்படம்பாறை ஏலக்காய் ஆராய்ச்சி மையத்தில் குரங்கில் இருந்த பேன் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது. பருவநிலை மாற்றம் மற்றும் வன பகுதியை ஒட்டிய புல்வெளி மூலம் பேன்களின் இனப்பெருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்