22 நிமிடத்தில் 40 செய்திகள் | இரவு தந்தி எக்ஸ்பிரஸ்

x

ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில், 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம், ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில், முதன்முதலாக சாம்பியன் பட்டம் என்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. 2வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன்ர. முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா வீர‌ர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து 2 பிரதமர்களை தவற விட்டதற்கு திமுக தான் காரணம் என, சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமராவதை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து பிரதமர், முதல்வர் வர வேண்டும் என்றார். அதனை பாஜகவால் தான் உருவாக்க முடியும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியால், தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியால் தவித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து கொண்டு ஜிஎஸ்டி, உதய் திட்டங்களை அதிமுக ஆதரித்ததாக தெரிவித்த அவர், தமது வெளிநாட்டு பயணத்தால், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளது என்றார். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என தமது வழியில் பணிகள் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9 ஆண்டுகளாக ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் கூட இல்லாமல் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக, வேலூரில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க‌க் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழர்களின் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து பாஜக அரசு சாதனை படைத்துள்ளதாகவும், உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளதாகவும் கூறினார். 3 ஆவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்றும் உறுதிப்பட கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்