மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு..அரசுத் துறைகளில் பணியிடங்களை நிரப்ப உத்தரவு..
மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அரசுத் துறைகளில் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தி பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளும், மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை நியமிக்க வேண்டும் எனவும், அதற்காக சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story