ஒரே பைக்கில் பயணித்த 4 பேர் - விபத்தை விலை கொடுத்து வாங்கிய பயணம் | மாணவன் துடிதுடித்து பலி

x

சென்னை மணலி பகுதியை சேர்ந்த 4 பேர், எண்ணூர் கடற்கரைக்கு சென்றுவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது எர்ணாவூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 வயதான பவன்குமார் என்ற பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மீதமுள்ள மூவரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்