ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

x

கேரள மாநிலம் மலப்புரத்தில் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு, கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மலப்புரம் முண்டுபரம் பகுதியைச் சேர்ந்த சபீஷ் என்பவருக்கு உறவினர்கள் பலமுறை போன் செய்தும், தொடர்பு கொள்ள முடியாததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது, சபீஷ், அவரது மனைவி ஷீனா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், அவர்களது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்