ரயில் மோதி 4 பேர் பலி..ஓட்டுனரை அடி வெளுத்த ஊழியர்கள்..

x

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் அருகே உள்ள லாசல்கானில், ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் நான்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அதிவேகமாக வந்த ரயிலில் சிக்கி, நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, ரயில் ஓட்டுநரை சக ஊழியர்கள் தாக்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்