16 நிமிடத்தில் 38 செய்திகள்.. | இரவு தந்தி எக்ஸ்பிரஸ்

x
  • சென்னையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மரண அவலத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோராக்கும் திட்டத்தை 4 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வர முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
  • அரசு பேருந்துகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பெறுவதில் தடையில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பயணிகள் கொடுக்கும் பட்சத்தில் அதனை நடத்துநர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயணிகளிடமிருந்து பெறக்கூடாது என, நேற்று வழங்கப்பட்ட சுற்றறிக்கை வெளியான நிலையில், அது திரும்பப் பெறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மணிப்பூருக்கு விரைந்துள்ளனர். இம்பாலின் நியூ செக்கன் பகுதியில் மெய்டேய் மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது. தொடர்ந்து மோதல் சம்பவம் நிகழ்ந்து வருவதால், இயல்பு நிலையை கொண்டு வர, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மணிப்பூருக்கு விரைந்தனர்.
  • உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு, அனைத்து வீரர்களும் தயாராக இருப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், தான் சோதனைக்கு தயாராக இருப்பதாகவும், வினேஷ் போகட் உள்ளிட்டோரும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சவாலை ஏற்றுக்கொண்ட பஜ்ரங் பூனியா, நார்கோ சோதனைக்கு ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிட்டார்.
  • கர்நாடக மாநிலத்தின் 16 வது சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர் வி தேஷ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் தாவர் சந்த் கெல்லாட், ஆர்.வி. தேஷ் பாண்டேவுக்கு, தற்காலிக சபாநாயகராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்