16 நிமிடத்தில் 38 செய்திகள் | மாலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (01.07.2023)

x


24 மணி நேரத்திற்கு காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிறைவேற்றாவிடில் 40 ஊழியர்களுடன் தலைமை செயலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில், ஓய்வூதியர்களின் 88 மாதம் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின தோடரின மாணவிக்கு நகராட்சி ஆணையர் பாராட்டி பேனா, டைரி பரிசாக வழங்கினார். கார்டன் மந்து பகுதியை சேர்ந்த தோடரின பழங்குடி மாணவி நீத்து சென் முதல் வாய்ப்பிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்ட நிலையில், உதகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் கலந்து கொண்டு மாணவியை கவுரவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் போட்டிப்போட்டு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட்னார். தும்பக்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த மேனகா, போளூரை சேர்ந்த ஏழுமலை கள்ளச்சாராய வழகில் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்