15 நிமிடத்தில் 37 செய்திகள்.. இரவு தந்தி செய்திகள் | Thanthi Night News | Speed News

x

12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மே மாதம் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த சட்ட முன்வடிவை எந்த நிபந்தனையும் இல்லாமல் திரும்ப பெற வேண்டும் என சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அமைச்சர்களுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இவை தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தோனியின் ஓய்வறிந்து அவர் குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். தனது கெரியரில் இறுதிக்கட்டத்தில் உள்ளேன் என தோனி கூறியது பற்றி டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ள அவர், சச்சின் அவுட் ஆனபிறகு டிவியை ஆஃப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும், இறுதிவரை மேட்ச் பார்க்க வைத்த இளைஞன் தோனி என புகழாரம் சூட்டியுள்ளார்.

சேலத்தில் விடிய விடிய மதுபானங்களை விற்ற பாரில், உள்ளே குடிமகன்களை வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். சேலம் பழைய பேருந்து நிலைய திரையரங்கம் அருகே உள்ள ஒரு பாரில், விடிய விடிய மது விற்பனை படுஜோராக நடைபெற்று வந்துள்ளது. இரவு முழுவதும் மது விற்பனை செய்யப்பட்ட பிறகு, இன்று காலையிலும், மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே விளை நிலங்களில் வீசி செல்லப்படும் வாட்டர் பாட்டில்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அங்கு, பெரும்பாலான மதுபான கடைகள் விவசாய தோட்டங்களில் இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைகளில் மது அருந்து வரும் மது பிரியர்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில் குப்பைகளை ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்களில் வீசி செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்