16 நிமிடத்தில் 35 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (19.07.2023)

x

பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, இந்திய தேசிய மேம்பாட்டு ஒருங்கிணைந்த கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், எதிர்க்கட்சிகளின் இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. INDIA என சூட்டப்பட்ட பெயர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் வகையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடங்கியிருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பேசிய அவர், தேசத்தை காக்க மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என்றார். மேலும் இது பாஜக - எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான சண்டை அல்ல எனவும், பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான சண்டை என்றும் ராகுல்காந்தி கூறினார்.


பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியது அன்றைய சூழல் என்றும் தற்போது, அடுத்து யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதில் நாங்கள் முடிவோடு இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதில் நாங்கள் முடிவோடு இருக்கிறோம் என அவர் கூறினார்.


எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைந்ததே கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் இப்போது தேவையில்லை என்றார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது என கனவு கண்டார்கள், நிதீஷ் குமார், மம்தா சேரமாட்டார்கள் என்று கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்