15 நிமிடத்தில் 35 செய்திகள்.. இரவு தந்தி செய்திகள்
- நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவானது.
- மாநில வளர்ச்சி மூலம் நாடு வளர்ச்சி அடையும் என்ற தொலைநோக்கு மத்திய அரசுக்கு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில், வாட்டர் மெட்ரோ மற்றும் டிஜிட்டல் அறிவியல் பூங்கா போன்ற மாநில அரசின் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சித் திறனை உலகம் ஏற்று கொண்டுள்ளது என்றார்.
- இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டுகள் என்றும் 2047 ஆம் ஆண்டு நாடு 100 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் பொழுது அனைத்து துறையிலும் முதன்மையான துறையாக இருக்கும் என்றார்.
Next Story