16 நிமிடத்தில் 32 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (14.07.2023)

x

உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்றும் பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பயங்கரவாத ஒழிப்பு, பருவநிலை மாற்றம், உற்பத்தி விநியோக கட்டமைப்பு என எந்தி பிரச்னையாக இருந்தாலும் உலக நாடுகள் இன்று இந்தியாவை எதிர்பார்த்துள்ளன என்றும் அவர் கூறினார்.


பாரீஸ் நகரில் ஆயிரக்கணக்கான பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரைற்றியபோது, அந்த அரங்கில் இந்திய ராணுவத்தினரின் பேண்டு இசை நிகழ்ச்சியும், கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அவரது மனைவியும் அன்புடன் வரவேற்றனர். எலிசி அரண்மனை வாசலில் காத்திருந்த பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடியை கட்டி தழுவி வரவேற்று அழைத்து சென்றார். பிரதமர் மோடிக்கு அரண்மனையில் இரவு விருந்து அளித்து பிரான்ஸ் அதிபர் கவுரவித்தார்.


டெல்லியில் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நகரின் பல பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு தொடர்பான காட்சிகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்