12 நிமிடத்தில் 32 செய்திகள்-மாலை தந்தி செய்திகள் (12.04.2023)

x
  • கேரளாவில், பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும், தனியார் வாகனங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் கொண்டுச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த வாரம் ஓடும் ரயிலில் பயணிகள் மூன்று பேர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கேரள அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆட்டோ அல்லது பிற வாகனங்களில் கொண்டுச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியரை, அதிமுக நிர்வாகி கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தான் வீட்டில் இல்லாத நேரத்தில், பணம் கடன் வசூலிக்கச் சென்று மிரட்டல் விடுத்த‌து யார் என்று கேட்டு, கஜேந்திரன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
  • இருதரப்பையும் காவல்துறையினர் சமரசம் செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் நடத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
  • கள்ளக்குறிச்சி அருகே, வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, தந்தை, மகன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கள்ளக்குறிச்சியில் 36 குடோன்களை வாடகைக்கு எடுத்து, சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்