துடிக்க துடிக்க இறந்த 3000 கோழிகள் - விழுப்புரத்தில் பரபரப்பு | Viluppuram | Flood |
மணம்பூண்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், கெடார் பகுதியில் இருந்து சித்தாமூர் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்னைக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், மூன்றாயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, உயிரிழந்த கோழிகளை புதைத்தார். இதனிடையே, ஐந்து லட்சம் மதிப்பிலான கோழிகள் உயிரிழந்ததால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story