ஒரு வாய் தண்ணீர் குடிக்க 2 கி.மி செல்லும் அவலம்.. நீர் இன்றி அவதிப்படும் 300 குடும்பங்கள்...- “கோடை ஆரம்பத்திலேயே இப்படி ஒரு நிலைமையா?“

x

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நீரேற்றும் அறைக்கு குறைந்த நேரமே மின்சாரம் வழங்குவதால், ஒரு கிராமமே 2 கிலோமீட்டர் வரை சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சிதம்பரத்தை அடுத்த மேலத்திருக்கழிப்பாலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதமாக நீரேற்றும் அறைக்கு குறைவான நேரமே மின்சாரம் வழங்கப்படுவதால், அனைத்து நீர்த்தக்கத் தொட்டிகளிலும் தண்ணீர் நிரம்பிய பிறகு, கடைசியாக மேலத்திருக்கழிப்பாலை தொட்டிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், 2 கிலோ மீட்டர் சென்று கொட்டாமேடு என்ற இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, உயர் அதிகாரிகள் கூறியதன் அடிப்படையிலேயே குறைவான மின்சாரம் வழங்கப்படுவதாக அவர்கள் பதில் அளித்துள்ளனர். எனவே, இந்த பிரச்னையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு, குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்