நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறும் வகையில் கொடூரமாக மோதிய 3 ரயில்கள்... விபத்து நடந்தது இப்படி தான்?
ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது எப்படி என்பதை தற்போது காணலாம்....
மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது.
நேற்று மாலை 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பஹானகா ரயில் நிலையம் அருகே வந்தபோது, கோரமண்டல் ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
இதையடுத்து இரண்டாவதாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற ரயிலும், தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளின் மீது மோதியது.
இதில் ஹவுரா செல்லும் ரயிலும் 3 முதல் 4 பெட்டிகள் வரை தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story