"3 பேர் சேர்ந்து நாயை.." - காவல் நிலையம் வரை சென்ற நாய் சண்டை
தெருநாய் எப்படி வளர்ப்பு நாயுடன் சண்டை போடலாம் என்று கூறி, நாயின் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. பெங்களூரில் உள்ள ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த ஜடியப்பா என்பவர், தெருநாய் ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்து வளர்த்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு அருகில் வசிக்கும் சகோதர்களான ரஞ்சித், ராகுல், ராஜத் ஆகியோர் பல ஆயிரம் ரூபாய்க்கு வெளிநாட்டு இன நாயை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். அவர்கள் வெளிநாட்டு இன நாயை நடைப்பயணம் அழைத்துச் செல்லும்போதெல்லாம் ஜடியப்பாவின் நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள், தெரு நாயை எப்படி வீட்டுக்கு கொண்டு வந்து வளர்க்கலம் என்று கூறி ஜடியப்பாவுடன் சண்டை போட்டனர். ஜடியப்பா வீட்டில் இல்லாத நேரத்தில், அவருடைய நாயை 3 சகோதரர்களும் அடித்து துன்புறுத்தினர். ஜடியப்பா வீட்டுக்கு வந்தது ம் தனது தாய் தாக்கப்பட்ட விஷயம் தெரிந்து, ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட போலீசார், சகோதரர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.