பட்டா கத்தியுடன் வந்த 3 பேர்.. உயிருக்காக ஓடிய பாமக பிரமுகர் மகன் -வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு- சென்னையில் பரபரப்பு

x


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சார்ந்த பாமக மாவட்ட செயலாளர் வண்ணை சத்யா வீட்டில், நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அது மட்டுமின்றி அவரது மகன் நிஷாலை, கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன், நிஷால் சண்டையிட்டதாக தெரிகிறது. தற்போது அதற்கு பகை தீர்த்துக்கொள்ள நிஷாலை வெட்ட முயன்றதாகவும், அவர் தப்பி ஓடிய நிலையில் அவரது இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்