மதுக்கடையில் 3 பேர் கொள்ளையடிக்க முயற்சி.. நண்பனை விடுதலை செய்ய சொல்லி பிளேடால் உடலை கிழித்துக் கொண்ட தோழன் - திருவண்ணாமலையில் பரபரப்பு

x
  • திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மதுபானக் கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
  • செங்கத்தை அடுத்த பெருமுட்டம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்ற பிறகு, 3 பேர் கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நெருங்கிச் சென்றபோது, அவர்களைக் கண்டு கடையில் இருந்து 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
  • 17 வயது சிறுவன் மட்டும் பிடிபட்டதால் அவரிடம் இருந்த பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.
  • விசாரணையில், அவர் மேல்புழுதியூரைச் சேர்ந்த கிஷோர் என்பது தெரியவந்தது. அவருடன் வந்த விஷால், சந்தோஷ் ஆகிய இருவரும் தப்பியதால், அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
  • அவர்களில் விஷால் என்பவர் மது போதையில் செங்கம் காவல்துறை அலுவலகம் முன்பு, தனது நண்பனை விடுதலை செய்யுமாறு, உடலில் பிளேடால் கிழித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • அவரை போலீசார், செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து அவர் மீண்டும் தப்பி ஓடியதால் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்