முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே.. தயாரிக்கப்பட்ட 3 லட்சம் தேசியக்கொடிகள்.. தென்காசியில் சுவாரஸ்யம்

x

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையொட்டி தென்காசி மாவட்டத்தில், அம்மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 லட்சம் தேசிய கொடிகளை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 யூனிட்களில் 250 தையல் இயந்திரங்களோடு நடைபெற்று வரும் பணியில், இதுவரை இரண்டு லட்சம் கொடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் கொடிகள், இரண்டு நாட்களில் தயாராகும் என தெரிவித்துள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், தேசிய கொடியை தயாரிக்க வாய்ப்பளித்தற்காக அரசுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்