உயிரோடு 3 பேர் ஆம்புலன்ஸில் வைத்து எரித்துக் கொலை - நடுநடுங்க வைக்கும் சம்பவம்.. - மனிப்பூரில் தொடரும் பதற்றம்

x

மணிப்பூரில் ஏழு வயது சிறுவன், தாய் உட்பட மூன்று பேர் உயிருடன் ஆம்புலன்ஸில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடப்பது என்ன? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

மணிப்பூரில் நீண்ட நாட்களாக பழங்குடியினர் அந்தஸ்து வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர், 'மைதேயி' இன மக்கள். இதற்கு பழங்குடியினதவர்களான 'குகி' இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் வெடித்த வன்முறையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்து விட்டனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு... முகாம் களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்கு களில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அரசு எவ்வளவோ எச்சரித்தும்...ஆயுதங்களை ஒப்படைக்கப் போவதில்லை என முரண்டு பிடித்து வருகின்றனர்.

'குகி' சமூகத்தைச் சேர்ந்த மீனா ஹாங்சிங் தனது ஏழு வயது மகன் டோன்சிங் ஹாங்சிங்யுடன்...அசாம் ரைபிள்ஸ் முகாமில் வசித்து வந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதை அடுத்து ஞாயிறு அன்று ஆம்புலன்ஸில் சிகிச்சைக் காக அவர்களுடன் உறவினர் ஒருவரும் சென்றுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் சென்ற போதும், ஆம்புலன்ஸை வழிமறித்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்... மூன்று பேரையும் ஆம்புலன்ஸூக்குள்

வைத்து உயருடன் துடிக்க துடிக்க எரித்து கொலை செய்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில், நாளுக்கு நாள் நிலைமை கைமீறி சென்று கொண்டிருப்பதால் கலவரத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணையதள சேவையை ஜூன் 10ஆம் தேதி வரை முடக்கியுள்ளது.

இதை அடுத்து, மணிப்பூர் வன்முறையை ஒடுக்குவதற்காக 500 பி.எஸ்.எப்.வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்