3 வீடு..7 பவுன்..68 ஆயிரம்..அம்பேல்..சாவி இல்லாததால் கதவை உடைத்த கும்பல்..தென்காசி அருகே பரபரப்பு

x

புளியங்குடி அருகே 3 வீடுகளில் கதவை உடைத்து 7 பவுன் நகை, 68 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வம்சவிருத்தி நகரில் உள்ள செல்வம் என்பவரின் வீட்டில் இருந்து 65 ஆயிரம் ரூபாயையும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் வீட்டில் இருந்து 7 சவரன் நகையையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதவிர ஓய்வுபெற்ற கண்டக்டர் ராசுவின் வீட்டில் இருந்து 100 கிராம் கொலுசு, விலை உயர்ந்த கடிகாரம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்