"வேண்டாம்னு தலைப்பட அடிச்சிகிட்டேனே; இன்னைக்கு என் புள்ள என்கிட்ட இல்லயே"

x

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ளது ஸ்ரீவிவேகானந்த சேவாலயம்.. இந்த குழந்தைகள் காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட, அம்மா அல்லது அப்பாவை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

காப்பகத்தில் நேற்று உணவு ஒவ்வாமையால் சுருண்ட குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை காப்பகத்தின் வார்டன், காவலர், அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

காப்பகத்திலேயே மாதேஷ், அத்திஸ் என இரு குழந்தைகள் உயிரிழந்துவிட்ட நிலையில், உடல்நிலை மோசமான மற்றொரு சிறுவன் பாபு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் போது உயிரிழந்த சம்பவம் உலுக்கியது.

உடனடியாக மற்ற குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, வருவாய் துறை விசாரணையை தொடங்கியது.

விசாரணையில் குழந்தைகளுக்கு ஆயுதபூஜையன்று சுண்டல், பொறி, இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயதசமியன்று மாணவர்கள் சாப்பிட முடியாமல், மயக்கம், காய்ச்சலில் அவஸ்தை பட்டுள்ளனர். அவர்களுக்கு காப்பகம் தரப்பில் காய்ச்சல் மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுவனுக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் நேற்று காலை உணவு ஒவ்வாமையால் சிறுவர்கள் உயிரிழந்த சோகம் அரங்கேறியிருக்கிறது.

விடுதியில் விசாரித்த திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன், குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்ததால் கொடுத்த ரச சாதத்தில் 3 சிறுவர்கள் மட்டும் ரசத்தை குடித்திருக்கிறார்கள் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்