2ம் ஆண்டு பொறியியல் படிப்பு.. இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்
நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது
டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கு,
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதுடன் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. இரண்டாம் ஆண்டு பி.இ, பி. டெக் படிப்பிற்கான கலந்தாய்வு, இணையதளம் வாயிலாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story