11 நிமிடத்தில் 27 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (18.05.2023)

x

ஒடிசாவில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பூரி - ஹௌரா இடையே வந்தே பாரத் ரயில், பூரி, கட்டாக் ரயில் நிலையங்களின் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஒடிசாவில் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பொருநை அருங்காட்சியகம் கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். 33 கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 13 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த அருங்காட்சியகத்தில், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், வளையல்கள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரம் உள்ளிட்ட உலோகப் பொருட்கள், நாணயங்கள், பலவகை பானை ஓடுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மின் தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலங்களில் மின் தடையின்றி சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்