தமிழக எம்பி, எம்எல்ஏ-க்கள் மீது 260 கிரிமினல் வழக்குகள் - இன்று விசாரணை | supreme court

x

தமிழகத்தில் மட்டும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 260 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் மேலும், 51 எம்பிக்கள், 112 எம்எல்ஏக்கள் மீது வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 260 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்