1 மோதிரத்தில் 24 ஆயிரம் வைரங்கள்.. கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்.. வியந்து பார்க்கும் சென்னை மக்கள்
சென்னை வேளச்சேரியில், 24 ஆயிரத்து 679 வைரங்களுடன் கின்னஸ் சாதனை படைத்துள்ள ரோஜாப்பூ மோதிரம், மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. கேரள மாநிலம், மலப்புரம் காரத்தோடு பகுதியில் உள்ள ஆபரணத் தயாரிப்பு நிறுவனம், 24 ஆயிரத்து 679 வைரங்களைக் கொண்டு ரோஜாப் பூ மோதிரத்தை செய்துள்ளது. இந்த மோதிரத்தை 6 மாதங்களில் 400 தொழிலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதற்கான வைரங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. 'தி டச் ஆஃப் அமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோதிரம், மக்கள் பார்வைக்காக வேளச்சேரியில் உள்ள மாலில் வைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.
Next Story