24 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை அரசின் நடவடிக்கை கண்டித்து - காலவரையற்ற வேலை நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் மீனவர்கள் இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெகதாபட்டிணத்தில் இருந்து கடந்த 27ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 24 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் ஐந்து விசைபடகுகளுடன் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அத்துமீறி கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story