கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலி...ரூ.4 லட்சம் நிவாரணம் - பீகார் முதல்வர் அறிவிப்பு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 22 பேரின் குடும்பத்தினற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் மோதிஹாரியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன், கள்ளச்சாராயம் குடித்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 22 பேர் வரை தற்போது உயிரிழந்திருப்பதாக காவல்துறை உறுதி செய்துள்ளது. இன்னும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மதுவிலக்கை ஆதரிப்பதாகவும், மது அருந்துவதற்கு எதிரானவர்கள் என்றும் அந்த குடும்பத்தினரிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெறப்படும் என பீகார் முதலமைச்சர் தெரிவித்தார்.