தேவி பெயரில் வந்த 'பாவி'... ஜட்ஜ் வீட்டிலேயே 'உல்லாச' நாயகனுடன் சம்பவம் செய்த 'கேடி' நர்ஸ்...

சென்னையில் நீதிபதியின் வீட்டில் இருந்து 207 சவரன் நகைகளை பணிப்பெண் திருடி சென்ற சம்பவம் குறித்தும், பரபரப்பான இதன் பின்னணி குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு...
x

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸின் வீடுகளில் வீட்டு பணியாளர்களே நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

தற்போது, அதே பாணியில் ஒரு கொள்ளை சம்பவம் நீதிபதியின் வீட்டில் அரங்கேறியிருக்கிறது...


செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் தமிழ்செல்வி. இவர் சென்னை அசோக்நகரில் தனது மாமனார் மற்றும் மாமியாருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்...

அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் தமிழ்செல்வி வசித்து வரும் நிலையில், கீழ்தளத்தில் மாமனார் மதுரகவி மற்றும் மாமியார் சுந்தரவள்ளியும் வசித்து வந்துள்ளனர்...

இந்நிலையில், வயது மூப்படைந்தும், உடல் நிலை பாதிக்கப்பட்டும் சிரமப்பட்டு வந்த மாமியாரை கவனிக்க ஏஜென்சி மூலம் செவிலியரான தேவி என்பவரை பணியில் அமர்த்தியுள்ளனர்...

வாரம் ஒரு முறை செவிலியர்கள் மாறி மாறி வருவது போல் பேசி ஒப்பந்தம் செய்த நிலையில், பணிக்கு சேர்ந்த மூன்றாவது நாளிலேயே தேவி திடீரென வேலையை விட்டு நின்றிருக்கிறார்...

இதன்பின்பு வேறோரு செவிலியர் பணிக்கு வந்து சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் வீட்டின் பீரோவில் நகைகளை சரிபார்த்த நீதிபதியின் மாமனார், பீரோவில் இருந்த 185 சவரன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்...

இது குறித்து முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, திடீரென பாதியிலே பணியிலிருந்து நின்ற செவிலியர் தேவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

உடனே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை தொடர்பு கொண்ட போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது...

இதையடுத்து, தேவியின் செல்போன் எண்ணை ட்ராக் செய்த போலீசார், அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை எடுத்து விசாரணையை ஆரம்பித்தனர்...

அதில், கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கு மேலாக தொடர்ந்து வந்திருந்த ஜெகநாதன் என்பவரின் செல்போன் நம்பரை கைப்பற்றி போலீசார் ட்ராக் செய்த போது சிக்னல் விழுப்புரத்தில் இருப்பதாக காட்டியுள்ளது...

இதையடுத்து, விழுப்புரம் விரைந்த போலீசார், லாட்ஜில் பதுங்கியிருந்த ஜெகநாதன் மற்றும் தேவி இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்...

விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்ராம் பட்டு பகுதியை சேர்ந்த தேவிக்கு திருமணமாகியதும், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது...

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்த அவர், சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்...

இதில், திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் ஜெகநாதன் அடையாறில் வசித்து வரும் நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்தித்து இருவரும் தகாத உறவை வளர்த்து வந்துள்ளனர்...

இதனிடையே, நீதிபதியின் வீட்டில் கிடைத்த செவிலியர் பணியில், வீட்டிலிருந்த நகைகளை கண்டு திகைத்து போன தேவி, தனது தகாத உறவு காதலனுடன் சேர்ந்து நகையை திருட திட்டமிட்டிருக்கிறார்...

வாரம் ஒரு முறை செவிலியர்கள் மாறுவதால் யார் திருடினார்கள் என கண்டுபிடிக்க முடியாது என எண்ணிய தேவி, வீட்டிலிருந்த நகைகளை திருடி ஜெகநாதனுடன் தலைமறைவானது தெரியவந்தது...

காவல்நிலையத்தில் 185 சவரன் நகைகள் மாயம் என புகாரளித்திருந்த நிலையில், இருவரிடமிருந்தும் 207 சவரன் நகைகள் மற்றும் 34 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்