2024 நாடாளுமன்ற தேர்தல் - வியூவுகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்

x

பெங்களூரில் ஜூலை 17 ,18ம் தேதிகளில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன .

பெங்களூருவில் ஜூலை 17-18ம் தேதிகளில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிக் கூட்டத்துக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜூலை 17 ஆம் தேதி, கூட்டம் மாலை 6 மணிக்குத் தொடங்கும். அதைத் தொடர்ந்து இரவு உணவு மற்றும் ஜூலை 18 - ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக, கொங்கு தேச மக்கள் கட்சி என பிற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்த்து மொத்தமாக 24 கட்சிகள் பங்கேற்க உள்ளன. இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களுரூ ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வருகை தரக் கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

-


Next Story

மேலும் செய்திகள்