2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் - பொதுமக்களிடம் இருந்து வந்த கருத்துகள்
- வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து இதுவரை நேரடியாக 750 க்கும் மேற்பட்ட கருத்துகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள், வேளாண் சார்ந்த ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்காக கடந்த சில நாட்களாகவே திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்தோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
- மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன.
- இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மின் அஞ்சல் மூலமாகவும் வாட்ஸ்ஆப் மூலமாகவும் கருத்துக்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- இந்தநிலையில், இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்கள் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- அதன்படி இதுவரை 750 க்கும் மேற்பட்ட கருத்துகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Next Story